கிழக்கு ஆக்லாந்தில் அரசாங்கத்தால் நடத்தப்படும் கட்டுமான பணியிடத்தில் சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய ஒரு நிறுவனம் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளது.

நியூசிலாந்தில் பணிபுரிய தேவையான சட்டபூர்வமான அனுமதி இல்லாதவர்களை வேலைக்கு அமர்த்தியமை,புலம்பெயர்ந்தோரை வேலைக்கு அமர்த்தியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை டைசன் ஹோம்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் எதிர்கொண்டுள்ளது.

இன்றையதினம் நிறுவனத்தின் ஒரே இயக்குநரான டச்செங் ஜாவோ, ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் சமூக நீதவான் ஜான் ஹோம்ஸ் முன் டைசன் ஹோம்ஸ் நிறுவனத்தின் சார்பில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்நிலையில் சட்டவிரோத தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திய குற்றத்திற்காக குறித்த நிறுவனத்திற்கு 3100 டொலர்கள் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.