Breaking News

லஞ்சம் - இந்தியா 77வது இடம்

லஞ்சம் - இந்தியா 77வது இடம்

லஞ்சம் - இந்தியா 77வது இடம்

உலக அளவில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தில் இந்தியா 77வது இடத்தில் உள்ளதாக லஞ்ச ஒழிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாந்து மாகாணத்தில் அன்னாபொலிஸ் நகரில் லஞ்ச ஒழிப்பு அமைப்பான டிரேஸ் லஞ்ச இடர் மேட்ரிக்ஸ் அமைப்பு, அரசுடன் தொழில் தொடர்புகள், லஞ்ச ஒழிப்பு மற்றும் அமலாக்கல், அரசு மற்றும் சிவில் சேவை வெளிப்படைத்தன்மை, ஊடகங்கள் உள்ளிட்டவற்றின் சிவில் சமூக மேற்பார்வை திறன் ஆகிய 4 காரணிகளின் அடிப்படையில் மொத்தம் 194 நாடுகளில் தொழில்களில் நிலவும் லஞ்சத்தை மதிப்பிட்டு பட்டியலிட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியான பட்டியலில் வடகொரியா, துர்க்மேனிஸ்தான், தெற்குசூடான், வெனிசூலா, எரித்ரியா ஆகியவை தொழில் ரீதியிலான லஞ்ச ஆபத்தை அதிகம் கொண்டுள்ளன.