வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட West coast நகரமான வெஸ்ட்போர்ட்டில் விடுதியொன்று தீப்பிடித்தது.

Russel தெருவில் உள்ள Bazil's Backpackers Hostel & Surf பள்ளிக்கு அதிகாலை 2.30 மணியளவில் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.

குறித்த விடுதியில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறினர் என்றும் யாரும் காயமடையவில்லை என்றும் தலைமை தீயணைப்பு அதிகாரி ஆலன் கென்னடி தெரிவித்தார்.

West coast நிலையங்களில் இருந்து குறைந்தது 30 தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஏழு தீயணைப்பு வண்டிகள் வரவழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.