ஆக்லாந்தின் வடக்கே உள்ள Kaiwaka அருகே ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Kaiwaka விலிருந்து தெற்கே நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநில நெடுஞ்சாலை 1 இல் இன்று மாலை 6 மணியளவில் இரண்டு வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.

இதனிடையே ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இருவர் பலத்த காயமடைந்துள்ளனர் என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.