கொவிட் -19 குறித்த APEC கூட்டத்திற்கு முன்னதாக, இன்று காலை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தொலைபேசி அழைப்பினூடாக தொர்புகொண்டு பேசியுள்ளார்.

இன்று இரவு நடைபெறவிருக்கும் APEC தலைவர்களின் சந்திப்பு மற்றும் தொற்றுநோயிலிருந்து வெளியேற ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்து இவர்கள் கலந்துரையாடியதாக பிரதமர் ஆர்டெர்ன் தெரிவித்தார்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, வர்த்தகம் மற்றும் முதலீடு மற்றும் உள்நாட்டு மற்றும் பசிபிக் தடுப்பூசி ரோல்-அவுட்கள் குறித்தும் அவர்கள் உரையாற்றியுள்ளனர்.

மேலும் கிறிஸ்ட்சர்ச் அழைப்பில் இணைந்ததற்கு பைடனுக்கு நன்றி தெரிவித்ததாகவும், அமெரிக்காவுடன் தொடர்ந்து வலுவான உறவை வளர்த்துக் கொள்ள எதிர்பார்த்திருப்பதாகவும் ஆர்டெர்ன் கூறினார்.