Palmerston North இல் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

Highbury இல் உள்ள Hull Place இற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு முன்னதாக குறித்த இச்சம்பவத்திற்கு போலீசார் வரவழைக்கப்பட்டனர்.

ஆரம்பத்தில் ஒரு போலீஸ் ஊடக செய்தித் தொடர்பாளர், துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்று கூறினார்.

இருப்பினும், சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் Palmerston North மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார்.

அந்த நபர் பலத்த காயமடைந்திருந்தார் ஆனால் அவரது காயங்கள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் அவர் நிலையான நிலையில் இருப்பதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

துப்பறியும் சார்ஜென்ட் கிரேக் ஷெரிடன், இரண்டு சம்பவங்களும் தொடர்புபட்டதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூடு தொடர்பாக எவரும் கைது செய்யப்படவில்லை, சம்பவங்களின் சூழ்நிலை குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.