COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வைரஸ் தொற்று உள்ளதாக முடிவுகள் வெளியாகி சில மணிநேரங்களில் 90 வயதான சிட்னியை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தென்மேற்கு சிட்னியைச் சேர்ந்த அந்தப் பெண்ணிற்கு அவரது குடும்ப உறுப்பினரிடமிருந்து வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக என்.எஸ்.டபிள்யூ ஹெல்த் தெரிவித்துள்ளது.

அவர் லிவர்பூல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமையன்று COVID-19 பரிசோதனைக்குட்படுத்தப்பட்டார்,இந்நிலையில் தொற்று உறுதி செய்யபட்ட சில மணி நேரங்களின் பின் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் COVID-19 க்கு எதிராக அந்த பெண்ணுக்கு தடுப்பூசி போடப்படவில்லை என்று தலைமை சுகாதார அதிகாரி கெர்ரி சாண்ட் தெரிவித்தார்.

இதனிடையே New South Wales முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் தற்போது 52 பேர் COVID-19 தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர், இதில் 15 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளதாக டாக்டர் சாண்ட் இன்று உறுதிப்படுத்தியுள்ளார்.