குரோஷியாவில் ஆற்றின் நடுவே வரையப்பட்ட பிரமாண்ட மணல் ஓவியம் காண்போரை வியக்க வைக்கிறது.

நெரெத்வா (Neretva) நகரிலுள்ள ஆற்றின் குறுக்கே தண்ணீர் இல்லாத மணல் பகுதியில் நிகோலா ஃபாலர் (NIKOLA FALER)என்பவர் மணலில் தன் கைவண்ணத்தை காட்டியுள்ளார்.

ஆற்றில் தண்ணீர் வரும்போது தனது கலைப்படைப்புகள் மறைந்து போய்விடும் என நிகோலா ஃபாலர் கூறுகிறார். ஒவ்வொரு ஆண்டும் குரோஷியாவில் 3 நாட்கள் நடைபெறும் ஜென் ஓபூசன் (Zen Opuzen) ஓவிய திருவிழாவில் தவறாது கலந்துகொண்டு தனது திறமையை வளர்த்துக்கொள்வதாகவும் நிகோலா கூறுகிறார்.