நாடு முழுவதும் உள்ள செவிலியர்கள் திட்டமிட்ட வேலைநிறுத்த நடவடிக்கைக்கு முன்னேற வாக்களித்துள்ளனர்.

நியூசிலாந்து செவிலியர் அமைப்பு (NZNO), DHB களில் பணிபுரியும் அதன் 30,000 உறுப்பினர்கள் மேலும் மூன்று வேலைநிறுத்தங்களுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த வேலைநிறுத்த போராட்டங்கள் எதிர்வரும் ஜூலை 29 ஆம் திகதி 24 மணி நேரமும், ஆகஸ்ட் 19ஆம் திகதி அன்று 8 மணி நேர வேலைநிறுத்தமும், செப்டம்பர் 9 ஆம் திகதி 24 மணி நேர வேலைநிறுத்தமும் முன்னெடுக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

NZNO இன் முன்னணி வழக்கறிஞர் டேவிட் வெயிட், வாக்குகள் மிக அதிகமாக இருப்பதாகவும், தொடர்ந்து வேலைநிறுத்த நடவடிக்கை குறித்து உறுப்பினர்கள் உறுதியாக இருப்பதாகவும் கூறினார்.

கடந்த மாதம் ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் முறிந்தபோது 30,000 செவிலியர்கள் ஜூன் 9ஆம் திகதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.