வடக்கு ஹாக்ஸ் விரிகுடாவில் வைரோவா அருகே ஒரு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

பிளாக் பவர் மற்றும் மோங்கிரல் மோப் குழுவினரிடையே நடந்து வரும் வன்முறைகளை தடுக்க போலீசார் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின்போதே துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வைரோவாவிற்கு வடக்கே சுமார் 200 பேர் வாழக்கூடிய சிறிய குடியேற்றமான Frastertown இல் கடந்த வெள்ளிக்கிழமை இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் 27 வயதான உள்ளூர் பிளாக் பவர் உறுப்பினரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள்,ஷாட்கன் தோட்டாக்கள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

வைரோவா பகுதி மறுமொழி மேலாளர் மூத்த சார்ஜென்ட் மவுய் ஆபென், துப்பாக்கிகள் எங்கிருந்து வந்தன என்பதையும், அப்பகுதியில் அண்மையில் நடந்த துப்பாக்கி ஏந்திய சம்பவங்களில் அவை பயன்படுத்தப்பட்டதா என்பதையும் பொலிசார் பரிசீலனை செய்து வருவதாக அவர் தெரிவித்தார்.