மாதூராவின் பழைய காகித ஆலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 10,000 டன் அலுமினிய கழிவுகளும் முற்றாக அகற்றப்பட்டுள்ளது.

Tiwai Point smelter அலுமினிய உற்பத்தி கழிவுகள் ஈரமாகிவிட்டால் அது கொடிய அம்மோனியா வாயுவை வெளியிடுகிறது.இத்தகைய மோசமான கழிவு south land நகரில் உள்ள பழைய காகித ஆலையில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த பழைய காகித ஆலை மாதாரா நதிக்கு அடுத்ததாக அமைந்துள்ளது.

சுற்றுச்சூழல் மந்திரி டேவிட் பார்க்கர் மாதூராவிலிருந்து கடைசி கழிவுப்பொருள் பைகள் கடந்த புதன்கிழமை அகற்றப்பட்டதாக தெரிவித்தார்.

அகற்றப்பட்ட கழிவுகள் திவாய் பாயிண்ட் ஸ்மெல்ட்டரில் உள்ள நீர்ப்பாசனக் கப்பல் கொள்கலன்களில் சேமிக்கப்படுகின்றன.எனவே குறித்த கழிவுகளை எண்ணி குடியிருப்பாளர்கள் கவலைப்பட தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் சுரங்க நிறுவனமான ரியோ டின்டோ சுத்த நடவடிக்கைக்கு செலவான 6 மில்லியன் டாலரை செலுத்த ஒப்புக் கொண்டுள்ளது.