நீர்ப்பாசன கால்வாயில் கார் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில் ஓட்டுநரின் சடலத்தை போலீஸ் Dive squad இன்று காலை கண்டுபிடித்தது.

மிட்-கேன்டர்பரியில் (Mid-Canterbury) உள்ள புட்டிங் ஹில் (Pudding Hill) என்ற இடத்தில் நேற்று அதிகாலை கார் தண்ணீருக்குள் பாய்ந்து விபத்திற்குள்ளானது.

இந்நிலையில் நேற்றையதினம் காருக்குள் ஒரு பயணிகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன் கார் ஓட்டுனரின் சடலம் தேடப்பட்டு வந்தது.

இதனிடையே இன்றையதினம் கார் ஓட்டுனரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் இருவருக்கும் முறையான அடையாளம் காணும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும், சம்பவம் எதனால் ஏற்பட்டது என்பது குறித்த விசாரணைகள் தொடர்கின்றன என்றும் போலீசார் கூறுகின்றனர்.