மெத்வென் (Methven) அருகே ரங்கிடாடா டைவர்ஷன் ரேஸ் கால்வாயில் (Rangitata Diversion Race) கார் ஒன்று பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இதனிடையே காரில் இருந்து ஒருவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

அதிகாலை 1 மணியளவில் புட்டிங் ஹில் வீதியில் கால்வாய்க்குள் ஒரு கார் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக அவசர சேவைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் தண்ணீரில் இருந்து காரை மீட்டு காரில் இருந்த பயணியின் சடலத்தை மீட்டு எடுத்தனர்.

மேலும் கார் ஓட்டுநர் காணமல் போயுள்ளநிலையில் அவரை தேடுவதற்காக காவல்துறையின் தேசிய டைவ் படை (Dive squad) வரவழைக்கப்பட்டது.

இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபரை அடையாளம் காண முறையான அடையாள செயல்முறை தொடங்கியுள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.

விபத்தின் சூழ்நிலைகள் குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.