கடந்த 12 மாதங்களில் ரயில்கள் விலங்குகளுடன் மோதிய 67 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கிவிரெயில் தெரிவித்துள்ளது.

வார இறுதியில் ஓட்டோரோஹங்கா மற்றும் ஹங்காட்டிகி இடையேயான தடத்தில் ரயில் என்ஜின் மாட்டுகளுடன் மோதியதை கிவிரயில் நிறுவனம் உறுதிப்படுத்தியது.

கிட்டத்தட்ட 30 மாடுகள் இறந்துவிட்டதாக கிவிரெயில் தெரிவித்துள்ளது.

பாமர்ஸ்டன் நார்திலிருந்து ஹாமில்டன் செல்லும் சரக்கு ரயில் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் ரயில் நடைபாதையில் அலைந்து திரிந்த விலங்குகளைத் தாக்கியது.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது ஒரு துன்பகரமான சூழ்நிலை என்று கிவிரெயில் செய்தித் தொடர்பாளர் ரங்கி ரரேர் கூறினார்.

"இது போன்ற சம்பவங்கள் விலங்குகளுக்கு பேரழிவு மற்றும் விவசாயிகள், எங்கள் ரயில் ஓட்டுநர்கள் மற்றும் ரயில் பாதையை சுத்தம் செய்பவர்களுக்கு துன்பத்தை தருகின்றன எனவும் இதுபோன்ற நிகழ்வுகள் அசாதாரணமானவை அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

குறித்த சம்பவம், கால்நடைகள் தடங்களில் வருவதைத் தடுக்க நிலத்தில் நன்கு வேலி அமைத்தல் மற்றும் வாயில்கள் மூட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது."

இந்த சம்பவம் என்ஜின்,மேல்நிலை மின்சக்திக்கான இழுவை கம்பத்தை சேதப்படுத்தியதுடன் ஆக்லாந்து மற்றும் வெலிங்டனுக்கு இடையே இயங்கும் வடக்கு எக்ஸ்ப்ளோரர் பயணிகள் ரயில் உட்பட எட்டு ரயில் சேவைகளை சீர்குலைத்தது.

இந்நிலையில் கிவிரெயில் கால்நடை உரிமையாளரிடமிருந்து செலவுகளை ஈடுசெய்ய முயற்சிக்கலாம் என்று ரரேர் மேலும் தெரிவித்தார்.