கனடாவில் வரலாறு காணாத அளவில் வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், காட்டுத்தீ காரணமாக ஒரு நகரில் வாழும் மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளார்கள். கனடாவில் இதுவரை இல்லாத அளவில், வெப்பநிலை 121 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகரித்துள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Lytton நகரம் காட்டுத்தீயால் சூழப்பட்டுள்ளதால், நகர மக்கள் 300 பேரையும் வீடுகளை விட்டு வெளியேறுமாறு நகர மேயர் Jan Polderman உத்தரவிட்டுள்ளார்.

இதுவரை 20 கட்டிடங்கள் வனத்தீக்கு இரையாகிவிட்டன. ஆனால், யாருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக தகவலில்லை. சாலைகள் மூடப்பட்டுள்ளன, தீயணைப்புத்துறையினர் காட்டுத்தீயை அணைக்க போராடி வருகிறார்கள். இந்நிலையில், பசிபிக் வடமேற்கு பகுதியில் வெப்பம் காரணமாக இதுவரை 400 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது.