கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் செயல்பட்ட செயின்ட் யூஜின்ஸ் என்ற உறைவிட பள்ளி அருகே 182 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மே மாதம் இதே பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில், காம்லூப்ஸ் என்ற இடத்தில் 215 பழங்குடி குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

வதிவிடப் பள்ளிகளில் உயிரிழந்த பழங்குடிக் குழந்தைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், கனடா தினத்தன்று, சமாதானக் கோபுரத்தில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டும் என்று கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடே கேட்டுக் கொண்டுள்ளார்.

கனேடியர்கள் பலரும் இந்த சோகத்தை பிரதிபலிப்பதால் தாம் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.