சார்லஸ்-டயானா இங்கிலாந்து ராஜ குடும்பத்தைச் சேர்ந்த இந்த ஜோடியில் டயானா 1997ஆம் ஆண்டு ஒரு விபத்தில் இறந்துவிட்டார். சார்லஸுக்கும் டயானாவிற்கும் 1981ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடந்தது. அப்பொழுது சார்லஸ், தன் வருங்கால மனைவி டயானாவிற்கு கார் ஒன்றை பரிசளித்தார். ஃபோர்ட் நிறுவனத்தின் எஸ்கார்டு என்ற இந்த ரக கார் அந்த காலத்தில் மிக பிரபலமாக பேசப்பட்டது.

சில்வர் கலரில் உள் 1.6 லிட்டர் ஜியா சலூன் இன்ஜின் கொண்ட இந்த கார் 1982ஆம் ஆண்டு ஏலத்திற்கு வந்தது அப்பொழுது பழைய பொருட்களை சேமிக்கும் ஒருவர் இந்த காரை அப்பொழுது 6000 டாலர் கொடுத்து வாங்கினார். இந்நிலையில் இதை தற்போது விற்பனை செய்ய விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த தென் அமெரிக்காவின் மியூசியம் ஒன்று இதை 52,640 பவுண்ட், அதாவது இந்திய பண மதிப்பில் 54 இலட்சத்திற்கு ஏலத்திற்கு எடுத்துள்ளது. இதை ஏல நிறுவனத்தினர் லூயின்ஸ் ராபெட் மற்றும் ரீமான் டென்னீஸ் ஆகியோர் உறுதிபடுத்தியுள்ளனர்.

இந்த கார் தற்போது வரை அது என்ன கலரில் இருந்ததோ அதே கலரில்தான் இருக்கிறது. பிரிட்டிஷ் பதிவாக WEV 297W என்ற பதிவெண்ணில் இருக்கிறது. தற்போது வரை இது 83 ஆயிரம் மைல்கள் அதாவது 1.33 லட்சம் கிலோ மீட்டர் ஓடியுள்ளது.