பிரித்தானியாவின் பாதுகாப்பான கொரோனா நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்!

பிரித்தானியாவின் பாதுகாப்பான கொரோனா வைரஸ் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தனிமைப்படுத்தல் விதிக்கு அமைய வேறு நாடுகளில் இருந்து செல்பவர்கள் அங்கு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட வேண்டும்

எனினும் இலங்கை உட்பட ஐந்து நாடுகளுக்கு பிரித்தானியா விதிவிலக்கு அளித்துள்ளது.

அதற்கமைய இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் பயணிகள், பிரித்தானியாவிற்கு சென்றதும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டியதில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இஸ்ரேல், உருகுவே, நமீபியா, மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் இருந்து பிரித்தானியாவிற்க செல்பவர்கள் அங்கு சென்றதும் 14 நாட்கள் தனிமைப்படுத்தத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜெருசலேம், பொனெய்ர், அமெரிக்க விர்ஜின் தீவுகள், சிண்ட் யூஸ்டேடியஸ் மற்றும் சபா, மற்றும் வடக்கு மரியானா தீவுகளிலிருந்து வரும் பயணிகளுக்கும் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.