கொரோனா வைரசை அழித்தொழிக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு டெல்டா உருமாறிய கொரோனா தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என அமெரிக்கத் தொற்று நோய் வல்லுநர் அந்தோணி பாசி தெரிவித்துள்ளார். டெல்டா கொரோனா வைரசுக்கு எதிராக வேக்சினின் தடுப்பாற்றல் குறைகிறது என்றாலும்கூட அது பலனளிக்காமல் செல்வதில்லை. அதிலும் குறிப்பாக டெல்டா கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பூசிகள் தடுப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. எனவே வேக்சின் பணிகளை வேகப்படுத்துவதன் மூலம் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.