இதை அணிந்துக்கொண்டால், சுவாசம் மூலமாக, 90 நிமிடங்களில் தொற்று பாதிப்பு உள்ளதா, இல்லையா என்பதை அந்த மாஸ்க் உறுதிசெய்துவிடும் என சொல்லப்பட்டுள்ளது.

ஆர்.டி.பி.சி.ஆர். போன்ற பரிசோதனைகள் தேவைப்படாத இந்த கொரோனா பரிசோதனை முறையை, ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

இந்த கொரோனா பரிசோதனை மாஸ்க், மிகவும் மலிவான விலையிலேயே இருக்குமென விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

 இந்த மாஸ்க்கில் இருக்கும் ஒரு பட்டனை அழுத்தினால், அது சுவாசத்தை பரிசோதிக்கத் தொடங்கும். அந்த மாஸ்க்கை, ஸ்மார்ட்போனுடன் இணைத்துவிட்டால் மொபைலிலேயே ரிசல்ட்டை பார்த்துக்கொள்ளலாம்.