கடந்த மே மாதம் ஐந்து மருத்துவமனைகளின் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை முடக்கிய ransomware தாக்குதலுக்குப் பின்னர் வைகாடோ மாவட்ட சுகாதார வாரியத்தின் ஆவணங்கள் இருண்ட வலையில் (Dark web) வெளியிடப்பட்டுள்ளன.

குறித்த ஆவணங்களின் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் தரவை உள்ளடக்கியதாக காணப்படுகின்றன.

Ransomware தாக்குதல் DHB இன் மருத்துவமனைகளின் சேவைகளை நிறுத்தியதுடன் நோயாளிகளை தொடர்ந்து கவனித்துக்கொள்வதற்கு ஊழியர்கள் கையேடு பணிகளை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது.

நிபுணத்துவ சிகிச்சை தேவைப்படும் சிலர் மற்ற DHB க்கு பயணிக்க வேண்டியிருக்கிறது.

IT பாதுகாப்பு நிபுணர் டேனியல் ஐயர்ஸ் மிட்டே ரிப்போர்ட் குறித்த ஆவணங்களை பார்த்து பின்னர் அது DHB மருத்துவமனை ஆவணங்கள் என்பதை உறுதி செய்தார்.

மேலும் ஆவணங்களில் கடிதப் போக்குவரத்து,மருத்துவ பதிவுகள் மற்றும் நிதித் தரவு ஆகியவை அடங்கியுள்ளதாக தெரிவித்தார்.