எகிப்தில் தனது  பட்டப்படிப்பை பாதியில் விட்டு விட்டு பாலைவனத்தில் தேள்களைப் பிடிக்க ஆரம்பித்த மொஹமெட் ஹாம்டி போஷ்டா(Mohamed Hamdy Boshta) என்ற  நபர் தனது 25 வயதில் மருந்து நிறுவனத்தின் (Cairo Venom) உரிமையாளராகியுள்ளார்.

 

தேள்களின் விஷத்தால் தயாரிக்கப்படும் விஷமுறிவு மருந்துகளுக்கு மேலை நாடுகளில் அதிகளவு கேள்வி உள்ளதை அறிந்த குறித்த நபர் பாலைவனங்களில் தேள்களைப் பிடிக்க ஆரம்பித்துள்ளார்.

 

 

பின்னர், அவற்றின் விஷத்தை சேகரித்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய ஆரம்பித்துள்ளார். இந்நிலையில் தனது பண்ணைகளில் 80,000 தேள்களைப் பராமரிக்கும் அவர், 1 கிராம் விஷமானது  இலங்கை மதிப்பில் சுமார்  18 லட்ச ரூபாவுக்கு  மேல் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.