பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மற்றும் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் QR குறியீடு ஸ்கேனிங் செய்தல் குறித்த ஆலோசனைகளை பரிசீலிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இன்று பிற்பகல் அமைச்சரவை கூட்டத்தின் பின்னரான ஊடக சந்திப்பில் பேசிய பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன், அதிக ஆபத்துள்ள சில இடங்களில் QR குறியீடு ஸ்கேனிங்கை கட்டாயமாக்குவது குறித்து அமைச்சரவை ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் அந்த ஆலோசனையை பரிசீலிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அதிக ஆபத்து என்று கருதப்படும் இடங்களில் பார்கள் மற்றும் உணவகங்கள் மற்றும் மக்கள் அதிக ஆபத்தில் இருக்கும் பிற இடங்களும் அடங்கும், என்று அவர் கூறினார்.

கொவிட் நிலை 2 மற்றும் அதற்கு மேற்பட்ட நிலையில் உள்ள பகுதிகளிலும், அதிக ஆபத்துள்ள சில இடங்களிலும் முகக்கவசம் பயன்பாட்டை கட்டாயப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்று அவர் கூறினார்.