மின் கம்பத்தில் மோதி மின் இணைப்புகள் வாகனத்தின் மீது விழுந்து நபர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

ரீஃப்டன் டவுன்ஷிப்பின் (Reefton township) வடக்கு முனையில் புல்லர் வீதி மற்றும் பிளாஸ்கெட் செயின்ட் மூலையில் இன்று அதிகாலை 1.35 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.

வீழ்ந்த மின் இணைப்புகளால் ஒருவர் வாகனத்தில் சிக்கியதாக தீயணைப்பு மற்றும் அவசரகால NZ செய்தித் தொடர்பாளர் ப்ரெண்ட் டன் தெரிவித்தார்.

மீட்புக் குழுவினர் அந்த நபரை காரில் இருந்து மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

விழுந்த கம்பம் மற்றும் மின் இணைப்புகள் சாலையைத் தடுத்தமையால் குறித்த சாலை மூடப்பட்டதாக போலீஸ் அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்நிலையில்  புல்லர் வீதி (Buller Rd) எலிசபெத் செயின்ட் (Elizabeth St) ஹட்டி செயின்ட் (Hattie St) மற்றும் க்ராம்ப்டன் வீதி (Crampton Rd) ஆகிய நான்கு வீதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக கிரேமவுத்தை தளமாகக் கொண்ட மின்சார சப்ளையர் WestPower தெரிவித்துள்ளது.