கிறிஸ்ட்சர்ச்சில் ஒரு வீட்டின் சமையலறையில் ஏற்பட்ட தீயில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

நேற்றையதினம் இரவு 9 மணியளவில் விக்ராம் (Wigram) மற்றும் ஸ்ப்ரேடனில் (Spreydon) இருந்து தீயணைப்பு சேவைகள் வரவழைக்கப்பட்டதாக தீயணைப்பு மற்றும் அவசரகால நியூசிலாந்து செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவருக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

மேலும் சொத்து சேதங்கள் ஏற்பட்டதாக அறிகுறிகள் ஏதும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.