மேற்கு கடற்கரை ஆற்றில் (West Coast river) கார் ஒன்று விபத்துக்குள்ளாகி மூழ்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மூத்த சார்ஜென்ட் ப்ரெண்ட் குக் தெரிவிக்கையில்,இன்று காலை 9.15 மணியளவில் ஹரிஹாரி அருகே (Harihari) வாங்கானுய் ஆற்றில் (Wanganui River) ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதாக போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

வாகானுய் பிளாட் ரோட்டின் முடிவில் வாகனம் ஆற்றில் பாயந்ததாக அவர் கூறினார்.

அவசர சேவைகள் வந்தபோது குறித்த நபர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

பிற்பகல் 2.45 மணியளவில் ஓட்டுநரின் உடல் மற்றும் கார் இரண்டும் மீட்கப்பட்டிருந்ததாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.

ஒரு நபர் மற்றும் ஒரு நாய் ஒரு வாகனத்திற்குள் இருப்பதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவித்ததாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.இந்நிலையில் நாய் உயிருடன் இருப்பதாக ப்ரெண்ட் குக் தெரிவித்தார்.

West Coast ROA மீட்பு ஹெலிகாப்டர், தீயணைப்பு மற்றும் அவசர நியூசிலாந்து குழுவினருடன் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.