வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் முழு அடைப்பு போராட்டம் இன்று (8) நடைபெறுகிறது.

 

அதன்படி இதனையொட்டி விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரயில் மறியல் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் திருத்த சட்டங்களை இரத்து செய்யுமாறு வலியுறுத்தி விவசாயிகள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிர்கட்சிகள் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.

 

அந்நிலையில் , மகாராஷ்டிரா மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. புல்டனா மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் அப்பகுதியில் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

இதேபோல் , ஒடிசா மாநிலத்தில் இடதுசாரிகள், வியாபார சங்கங்கள், விவசாய சங்கங்கள் இணைந்து புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திரா மாநிலத்திலும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விஜயவாடா நகரில் இடதுசாரிகள் சார்பில் போராட்டம் நடைபெற்றுவருகிறது.

 

மேலும் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்தால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரயில்,சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.