கிழக்கு ஆக்லாந்தின் (east Auckland) Botany இல் உள்ள கவுண்டவுன் (Countown) சூப்பர் மார்க்கெட்டில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துக்குப் பிறகு மூடப்பட்டுள்ளது.

நேற்று இரவு 7.30 மணிக்குப் பிறகு சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட சிறிய தீ விபத்து குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதாக துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஆல்பி அலெக்சாண்டர் தெரிவித்தார்.

மேலும் பொலிசார் தீயை சந்தேகத்திற்குரியதாக கருதுகின்றனர்.

தீ விபத்து தொடர்பாக போலீசார் பல விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சி.சி.டி.வி பதிவுகளை பரிசீலனை செய்து வருவதாகவும் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் ஆல்பி அலெக்சாண்டர் தெரிவித்தார்.

மேலும் கவுண்டவுன் சூப்பர் மார்க்கெட் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ பற்றிய தகவல் உள்ள எவரும் அல்லது செவ்வாய்க்கிழமை இரவு யாராவது சந்தேகத்திற்கு இடமாக செயல்படுவதைக் கண்டிருந்தால் 210615/2487 என்ற கோப்பு எண்னை மேற்கோள்காட்டி எண் 105 இல் பொலிஸைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.