ஆக்லாந்தின் மவுண்ட் ஈடன் (Auckland Mt Eden) சிறையில் நடந்த தாக்குதலில் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இன்று காலை 10.50 மணியளவில் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு அறிவிக்கப்பட்டது.

இரண்டு பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவருக்கு பலத்த காயங்களும் மற்றவருக்கு லேசான காயங்களும் உள்ளன.

சம்பந்தப்பட்டவர்கள் கைதிகள் அல்லது ஊழியர்களா என்பது தெரியவில்லை.

சம்பவம் தொடர்பாக போலீசார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மவுண்ட் ஈடன் திருத்தங்கள் வசதி என்பது ஆண்களுக்கான ரிமாண்ட் சிறை. விக்டோரியன் காலத்து கட்டிடத்தை மாற்றுவதற்காக இது 2011 இல் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.