தெற்கு தாரானகியில் (South Taranaki) இரண்டு கார்கள் ஒன்றோடு ஓன்று மோதிய விபத்தில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பிற்பகல் 3.30 மணியளவில் நடந்த இந்த விபத்தை தொடர்ந்து ஒகய்யவாவில் (Okaiawa) உள்ள தெற்கு பாதைக்கு அவசர சேவைகள் அழைக்கப்பட்டன.

பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், இரண்டு பேர் மோசமான நிலையில் இருந்ததாக தெரிவித்தார்.

ஒரு மீட்பு ஹெலிகாப்டர் அனுப்பப்பட்டது, மற்றும் நியூசிலாந்து தீ மற்றும் அவசர சேவை  மற்றும் செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் ஆகியவை சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டன.

சாலை தடைசெய்யப்பட்டு வடக்கு நோக்கி போக்குவரத்து திசை திருப்பப்பட்டது, ஆனால் மாலை 6.15 மணியளவில் சாலை மீண்டும் திறக்கப்பட்டது