ஹமில்டனில் உள்ள ஒரு விளையாட்டு பொருள் வியாபார நிலையத்தில் திருடர்கள் உடைகளை திருடியுள்ளனர்.

உல்ஸ்டர் மற்றும் லிவர்பூல் செயின்ட் அருகில்உள்ள விளையாட்டு  பொருட்கள் வியாபார நிலையமான  சஃபாரி என்ற வியாபார நிலையமே இன்று (12) அதிகாலை 4.55 மணியளவில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

கடைக்குள் நுழைவதற்கு ஒரு வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒரு நபர் ஆடை பொருட்களை எடுத்துக்கொண்டு வாகனத்தை விட்டுச் சென்றதாக போலீஸ் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

அங்கு விடப்பட்ட கார் தொடர்பாக தடயவியல் விசாரணைகள் உட்பட மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 105 என்ற இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ளலாம் அல்லது 0800 555 111 என்ற எண்ணில் க்ரைம்ஸ்டாப்பர்ஸ் வழியாக தகவல்களை வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.