ஹமில்டனில் இன்று நடந்த தாக்குதலில் ஒருவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 2.45 மணியளவில் க்மார்ட் பிளாசாவில் (Kmart plaza) நடந்த தாக்குதலுக்கு அவசர சேவைகள் வரவழைக்கப்பட்டன.

ஒருவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளநிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 16 வந்து இளைஞர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று போலீஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

மேலும் எதிர்வரும் திங்கட்கிழமை ஹாமில்டன் (Hamilton) இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்.

சம்பவத்தை தொடர்ந்து போலீசார் சாட்சிகளிடமிருந்து வாக்குமூலங்களை எடுத்து வருகின்றனர்