பிரித்தானியாவிலுள்ள செஸ்டர் (Chester)மிருகக்காட்சி சாலையில் உலகிலேயே சிறிய வகை குரங்கான மார்மோசெட் எனப்படும் அரிய வகை குரங்கினங்கள் காணப்படுகின்றன.

 

அதன்படி இவ் வகை குரங்குகள் தென் அமெரிக்காவில் அமேசான் மழைக்காடுகளில் வாழக்கூடியவை. மிகவும் சிறிய உருவுடன் காணப்படும், இந்த குரங்குகளின் வாலை விட்டுவிட்டுப் பார்த்தால் உடல் நீளம் 14 முதல் 16 செமீ மட்டுமே இருக்கும். வளர்ந்த குரங்குகளின் மொத்த எடையே 100 கிராம் வரைதான் இருக்கும்.

 

இந்த வகையில் குறித்த மிருகக்காட்சி சாலையில் சோய் மற்றும் பால்டிரிக் என்ற குரங்குகளுக்கு கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி இரட்டையர்களாக இரண்டு குரங்கு குட்டிகள் பிறந்தன.

 

இக் குரங்குகள் 5 சென்டி மீற்றர் நீளமும் எடை 10 கிராம் நிறையும் கொண்டவை எனக்கூறப்டுகின்றது.

 

இந்நிலையில் இக் குரங்குக் குட்டிகள் இப்போது பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

 

மேலும் இக் குரங்குகள் குறித்து மிருகக்காட்சி சாலையில் பணிபுரியும் விலங்குகள் காப்பாளர் ஹோலி வெப், கருத்துத் தெரிவிக்கையில் ”இக் குரங்குகள் இப்போது ஒரு எலுமிச்சை பழம் அளவிலேயே உள்ளன. அப்படியானால் இவை பிறக்கும் போது எந்த அளவில் இருந்திருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்” என்று கூறியுள்ளார்.