மாவீரர் தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவின் நாடாளுமன்றம் கார்த்திகைபூவினால் அலங்கரிக்கப்பட்ட விடயம்குறித்து இலங்கை இராஜதந்திர வட்டாரங்கள் ஊடாக தனது அதிருப்தியை வெளியிடவுள்ளது.வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சராஹல்டனிடம் இலங்கையின் அதிருப்தியை வெளியிடவுள்ளார்.

 

முன்னர் மாவீரர் தினத்தன்று பிரித்தானியாவில் நாடாளுமன்றத்தின் முன்பகுதி கார்த்திகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட விடயம் பொலிஸாருடன் தொடர்புபட்டது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் .தெரிவித்திருந்தது

 

இலங்கையின் டெய்லிமிரர் எழுப்பிய கேள்விக்கே பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இதனை .தெரிவித்திருந்தது. தமிழ்ஈழத்தின் தேசிய பூவாக விடுதலைப்புலிகள் கருதும் கார்த்திகை பூவினால் பிரித்தானிய நாடாளுமன்றம் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறித்த கேள்வியை அலட்சியப்படுத்திய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அது பொலிஸாருடன் தொடர்புபட்ட விடயம் என குறிப்பிட்டது என டெய்லிமிரர் தெரிவித்திருந்தது.

 

பிரித்தானிய தூதுவராலயம் ஒரு வரியில் பதிலளித்துள்ளது அது பொலிஸாருடன் தொடர்புபட்ட விடயம் என குறிப்பிட்டுள்ளது என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புகள் தொடர்பான பேரணிகளை கையாள்வது பொலிஸாருடன் தொடர்புபட்ட விடயம் என பிரித்தானிய உயர்ஸ்தானிகரலாயம் தெரிவித்துள்ளது என டெய்லிமிரர் குறிப்பிட்டிருந்தது.