தமிழ் சினிமா உலகின் தொண்டையை துக்கம் தினமும் அடைத்து வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கல்யாண ராமன், கடல் மீன்கள், மீண்டும் கோகிலா என பல நல்ல படங்களை இயக்கிய இயக்குநர் ஜி.என். ரங்கராஜன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 90. பழம்பெரும் இயக்குநரான ஜி.என். ரங்கராஜன் மறைவு சினிமா உலகுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாக மாறியுள்ளது.