பி.எஸ்.பி.பி. பள்ளியில் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சர்ச்சை குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

விஷாலின் ட்வீட் பதிவிற்கு நடிகையும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான காயத்ரி ரகுராம் சினிமாவுக்கு வரும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் நடக்கிறது. பல ஹீரோயின்களுக்கு தொல்லை கொடுக்கிறார்கள். நீங்களும், உங்களின் நண்பர்களும் பெண்களை பயன்படுத்திவிட்டு தூக்கி வீசி விட்டீர்கள்,உங்களால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என விஷால் மீது பாலியல் குற்றம் சுமத்தினார்.

இந்நிலையில் காயத்ரியின் அந்த பதிவிற்கு நடிகரும், விஷாலின் நண்பருமான நந்தா பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து நந்தா பேசுகையில் "எந்த நடிகை ஓடிப் போனார்? உங்களால் நிரூபிக்க முடியுமா?. பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆதரவாக குரல் கொடுங்கள் காயத்ரி. அரசியலுக்காக இப்படி எல்லாம் பேசுகிறீர்களா?

பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களின் பெற்றோருக்காக பேசாமல் அவர்களுக்கு ஆதரவாக பேசிய விஷாலை விமர்சனம் செய்கிறீர்கள். எந்த ஹீரோயினுக்காவது விஷால் தொல்லை கொடுத்தற்கான ஆதாரம் இருக்கிறதா? அவருக்கு எதிராக ஏதாவது புகார் அளிக்கப்பட்டதா என்று கேட்டார்.

அதற்கு காயத்ரி ரகுராம் பதிலளிக்கையில்..

அவர்களின் எதிர்காலத்தை சீரழிக்க நான் விரும்பவில்லை. முடிந்தது முடிந்துவிட்டது. அது எல்லாம் என் புகார்கள் இல்லை. ஏற்கனவே உள்ளவை என தெரிவித்துள்ளார்.