மத தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதாகக் கூறி பிரான்ஸ் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

 

இந்நிலையில், அங்குள்ள 66 குடியேறிகளை அந்த நாட்டை விட்டு வெளியேற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் 76 முஸ்லிம் பள்ளிவாயல்கள் பிரிவினைவாதத்துடன் தொடர்புள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனின் தெரிவித்தார்.

 

அதேநேரம், வரும் நாட்களில் இந்த இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும், இதுகுறித்த எழுந்துள்ள சந்தேகங்கள் உறுதிசெய்யப்பட்டால், அவற்றை உடனடியாக மூடுவதற்கு தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.