புரெவி சூறாவளி இலங்கைக்குள் நுழைந்தமையினால் பாரிய ஆபத்துக்கள் எதுவும் பதிவாகவில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதி இயக்குனர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

 

மரங்கள் உடைந்து விழுந்தமை போன்றவைகள் பல இடங்களில் பதிவாகியுள்ளதாக மாவட்ட முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.

 

எனினும் சூறாவளியுடன் வீசும் காற்று 70 – 80 கிலோ மீற்றர் வேகத்திலும், இடைக்கிடையே 90 கிலோ மீற்றர் வேகத்திலும் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

நேற்று இரவு 10.30 – 11.30 மணிக்கு இடையில் சூறாவளி இலங்கைக்குள் நுழைந்துள்ளது. அதற்கமைய முறையாக வடமேல் நோக்கி சூறாவளி பயணித்து மன்னார் நோக்கி இன்று காலை வரையில் பயணித்துள்ளதாக வளிமண்டலிவியல் திணைக்களம் தெரிவித்துள்ளார்.

 

அந்த கட்டமைப்பு காரணமாக பூநகரியில் இருந்து புத்தளம் வரையிலான கரையோர பிரதேசங்களில் பயணிப்பதனால் கடல் அலைகள் வேகமாக எழும்பும் என குறிப்பிடப்படுகின்றது.

 

அத்துடன் கடலுக்கு அருகில் உள்ள கீழ் மட்ட கடல் பிரதேசங்கள் நீரில் மூழ்க கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.