நடிகை சமந்தா, வெப் தொடரில் இலங்கை தமிழ்ப் பெண்ணாக நடித்துள்ளதாக அதன் இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜ் மற்றும் டீகே இயக்கிய ஃபேமிலி மேன் என்ற வெப் தொடரின் இரண்டாம் பாகமாக ’ஃபேமிலி மேன் 2’ உருவாகி இருக்கிறது. 

இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி ஆகியோருடன் நடிகை சமந்தாவும் முக்கிய கதாபாத்தாரத்தில் நடித்துள்ளார். இதனால் இந்த தொடருக்குத் தென்னிந்தியாவிலும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் நடிகை சமந்தாவை நடிக்க வைத்தது ஏன் என்று இயக்குனர்கள் ராஜ் மற்றும் டீகே அவர்கள் கூறும்போது, இந்த தொடரில் ஒரு தமிழ் நடிகையை நடிக்க வைக்க முடிவு செய்தோம். இதற்காக சில நடிகைகளைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, சமந்தாவிடம் கேட்கலாம் என நினைத்தோம். 

அவர் இந்த கேரக்டரை சரியாக செய்வாரா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால், சமந்தா அதில் உறுதியாக இருந்தார். அவர் இலங்கை தமிழ்ப் பெண்ணாக இதில் நடித்திருக்கிறார். சில கடினமான ஆக்‌ஷன் காட்சிகளிலும் நடித்திருக்கிறார் என்றார

இதையடுத்து நடிகை சமந்தா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதியுடன், காத்து வாக்குல ரெண்டு காதல், குணசேகர் இயக்கும் சாகுந்தலம் ஆகிய படங்களிலும் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.