பாகிஸ்தானில் புதிய கண்காணிப்பு உபகரணங்களாக சீனாவில் தயாரிக்கப்பட்ட உளவு விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்திய உளவுத் துறை தெரிவித்துள்ளது.

 

காஷ்மீரின் ஜம்மு மாவட்டம் ஆர்னியா பகுதியில் உள்ள சர்வதேச எல்லை அருகே பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பறந்துள்ளது.

 

இதனை அவதானித்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் உளவு விமானத்தை நோக்கி சில முறை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

 

இதையடுத்து, அந்த விமானம் திரும்பிச் சென்றுவிட்டதாகவும் குறித்த பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் பிஎஸ்எப் தலைமை அதிகாரி என்.எஸ்.ஜம்வால் தெரிவித்திருந்தார்.

 

இதுபோன்று அண்மைக் காலங்களில் அதிகளவில் ஆளில்லாத உளவு விமானங்கள் எல்லைப் பகுதியில் பறப்பதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது.

 

பாகிஸ்தானின் ஜிகாத் எனப்படும் புனிதப் போருக்கு ஆயுதமாக இதைப் பயன்படுத்துவதாகத் தெரிய வந்துள்ளது.

 

இந்தநிலையில் பாகிஸ்தானின் புதிய ஆயுதமாக சீனாவில் தயாரிக்கப்படும் ஆளில்லா உளவு விமானங்கள் உள்ளன என்று இந்திய உளவுத் துறை அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

 

இதுகுறித்து உளவுத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,

 

எல்லையைத் தாண்டி ஆயுதங்கள், வெடிமருந்துகளைக் கடத்துவதற்கு தற்போது பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இந்தியாவின் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் இந்த பயங்கர சதித்திட்டம் இடம்பெற்று வருகின்றது.

 

தீவிரவாத இயக்கங்கள் மட்டுமல்லாமல் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்பும் இந்த ஆளில்லாத விமானங்களை பயன்படுத்துகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.