பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் ஏற்பட்ட கலவரம் குறித்து தொடர்ச்சியாக ட்வீட்களை போட்டு வந்த நடிகை கங்கனா ரனாவத்தின் கணக்கை ட்விட்டர் நிர்வாகம் முழுமையாக முடக்கியது. தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாகி இருக்கும் கங்கனா ரனாவத், தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை அறிவித்துள்ளார்.