நடிகை ஆண்ட்ரியாவுக்கும் கொரோனா பாசிட்டிவ் ஆகி உள்ளது. பியானோ வாசிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு கொரோனா பாதிப்பை அறிவித்துள்ளார். இந்த ஆண்டு வெளியான மாஸ்டர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை ஆண்ட்ரியா. பிசாசு 2, அரண்மனை 3 உள்ளிட்ட படங்கள் அவர் நடிப்பில் உருவாகி வருகின்றன.