கொரோனா பாதிப்பின் காரணமாக நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தனர்.இந்நிலையில், இன்று அதிகாலை பாண்டு சிகிச்சைப் பலனின்றி காலமானார். அவரது மனைவி தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். பாண்டு மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.