பாடசாலை கல்வியை தொடர்ந்து கொண்டிருக்கும் போதே 15 வயதில் தமிழ் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த ஷகீலா, கருவேப்பிலை போலவே கோடம்பாக்கத்தில் பயன்படுத்தப்பட்டார்.

 

‘வயது வந்தவர்களுக்கு’ மட்டுமான மலையாள சினிமாவில் ஷகீலா நடிக்க ஆரம்பித்த போது, அவர் ‘புகழ்’ இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தது.

 

ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றை கதைக்கருவாக வைத்து ‘ஷகீலா’ என்ற பெயரிலேயே ஹிந்தியில் திரைப்படம் ஒன்று உருவாகியுள்ளது. ஷகீலா வேடத்தில் ரிச்சா சத்தா நடித்துள்ளார்.

 

திரைப்படத்தை இயக்கியுள்ள இந்திரஜித் லங்கேஷ் ஷகீலா நடித்த படங்களில் உதவியாளராக பணியாற்றிவர் என்பது கூடுதல் சிறப்பு.

கடந்த மார்ச் மாதமே அனைத்து பணிகளும் நிறைவடைந்து விட்ட இந்த திரைப்படம் ஊரடங்கு காரணமாக முடங்கி கிடந்தது. ஆரம்பத்தில் ஓ.டி.டி. தளத்தில் இந்த படத்தை திரையிட பேச்சுவார்த்தை நடந்தது.

 

ஆனால் ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திரையரங்குகளில் வௌியீடு செய்வது என இப்போது முடிவு செய்துள்ளனர். இந்த மாதம் 25 ஆம் திகதி நத்தார் தினத்தன்று ‘ஷகீலா’ வெளியாகின்றது.

 

இதனை நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு, புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. “அதிர்ச்சியூட்டும் உண்மைக்கதை” என படத்துக்கு துணை தலைப்பிட்டுள்ளனர்.