ரஷ்யாவில் இன்று அதிகாலை 6.4 ரிச்டர் அளவில் கடுமையான பூகம்பமொன்று ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

ரஷ்யாவில் சோவித்ஸ்கயா காவன் நகரிலிருந்து தெற்கு தென்கிழக்கே 88 கிலோமீற்றர் தொலைவில் இன்று  அதிகாலை 4.24 மணியளவில் கடுமையான பூகம்பம்  ஏற்பட்டுள்ளது.

 

இது ரிச்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இப் பூகம்பத்தால்  ஏற்பட்ட சேதங்கள்  உள்ளிட்ட பிற விவரங்கள் இது வரை வெளியாகவில்லை.