நடிகர் விஜய் நேற்று ஜார்ஜியாவில் இருந்து நாடு திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியேறிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.இந்நிலையில் ஜார்ஜியாவில் இருந்து திரும்பிய கையோடு நடிகர் விஜய் நடிகர் விவேக்கின் வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அவரது குடும்பத்தினரை சந்தித்த நடிகர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.