தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மகேஷ் பாபுவும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார். இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள மகேஷ் பாபு, நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். நீங்களும் உங்களுடைய தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். COVID-19 இரண்டாவது அலை அனைவரையும் கடுமையாக தாக்கியுள்ளது மற்றும் தடுப்பூசி போடுவது காலத்தின் தேவை என பதிவிட்டுள்ளார்.