வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர்.வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற மே 1 ஆம் தேதி அஜித்தின் 50வது பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகும் என்று தயாரிப்பாளர் போனி கபூர் கடந்த மாதம் தெரிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தார்கள்.இந்நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை காரணமாக பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.