குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் ஷிவாங்கிக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சிவகார்த்திகேயனின் டான் படத்தில் ஒப்பந்தமானார் ஷிவாங்கி. இதன் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் ஷிவாங்கி. அதாவது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தில் ஷிவாங்கி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.