நடிகர் விஜய் சேதுபதி, கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலின் விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிக்க விஜய் சேதுபதியை படக்குழு அணுகியதாக கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே கைவசம் ஏராளமான படங்களை வைத்துள்ள விஜய் சேதுபதி, இந்தப் படத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை என தெரிகிறது.